உள்ளடக்கத்துக்குச் செல்

கைலாசகிரி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைலாசகிரி என்ற தீர்த்த மலை வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் உமராபாத் என்ற ஊருக்கு அருகில் ஆம்பூர் குடியாத்தம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோயில் ஊராகும். இக்கோயில் முருகன் கோயிலாகும். இக்கோயில் இம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது. குறிப்பாக ஆம்பூரைச் சுற்றியுள்ளவர்கள் இக்கோயிலுக்கு அதிகமாக வருகின்றனர். இக்கோயிலில் ஆடிக்கிருத்திகை அன்று முக்கியமான திருமுழுக்கு நடைபெறுகிறது.

அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் பல குளங்கள் உள்ளன. மேலும் பல குகைகள் உள்ளன. இதனை ஆற்காடு நவாப் போருக்காக பயன்படுத்தியுள்ளார். மிக உயரமான மலைக்காட்டில் அமைந்துள்ளதால் சுற்றியிருக்கும் கிராமங்களையும் ஆறுகளையும் காண பிரம்மிக்கத்தக்கதாக இருக்கும். அதிகமான படிக்கட்டுகளில் ஏறமுடியாதவர்கள் வாகனத்தில் செல்ல வசதியாக மலைக்கு சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன[1].

போக்குவரத்து

[தொகு]

கிருத்திகையின்போது ஆம்பூரிலிருந்தும், குடியாத்தத்திலிருந்தும் பல பேருந்துகள் அரசால் இயக்கப்படுகின்றன.

உயிரினங்கள்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள இந்த கடாம்பூர் கைலாசகிரி மலையில் சிங்கவால் குரங்குகள் உள்ளன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசகிரி_மலை&oldid=3990901" இலிருந்து மீள்விக்கப்பட்டது